Wednesday, May 20, 2015

செந்த மண்ணில் விளையாடும் எதிர்பார்பில் உமர் அக்மல்

சிம்பாபே கிரிக்கட் அணியினர் பாக்கிஸ்தானில் விளையாடுவதற்கு தைரியமாக சென்றுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும்.
என்னதான் எதிர் அணிகளிடம் தோல்விகளை சந்தித்தாலும் சிம்பாபே அணி மனதிடமுள்ள அணி என்பதை நீரூபித்துள்ளது. 2009 ஆண்டு இலங்கை அணி பாக்கிஸ்தானில் சந்தித்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எந்தவொரு அணியும் பாக்கிஸ்தானுக்கு சென்று போட்டிகளில் விளையாடுவதில் அச்சத்தை வெளிப்படுத்தி வந்தன. எனினும் சிம்பாபே சிங்கங்கள்  அந்த அச்சத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
                                   
நேற்று லாஹூருக்கு சென்ற சிம்பாபே சிங்கங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டதோடு நாளைமறுதினம் நடைடபெறவுள்ள T20  போட்டியிலும் களமிறங்கவுள்ளது.
இரண்டு  T20  போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலம் இரு அணிகளும் மேதவுள்ளன.
இந்நிலையில்  பாக்கிஸ்தான் தேசிய அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   Imad Wasim,   Nauman Anwarஎன்ற  அந்த அறிமுக வீரர்கள் விளையாடவுள்ள நிலையில் உமர் அக்மல் தான் செந்த மண்ணில் விளையாடுவது குறித்த எதிர்பார்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 2009  ஆண்டு  சர்வதேச கிரிக்கட்டில் கால்தடம் பதித்த உமர் அக்மல் பாக்கிஸ்தானில் முதன்முறையா சர்தேச  கிரிக்கட் அணியொன்றை எதிர்கொள்ளவுள்ளார்.

No comments:

Post a Comment