Thursday, December 9, 2010

நிலவே நீயும்

நிலவே  நீயும்  தூய
தமிழாள் - என்
முப்பாட்டன்  காலத்தினில்
அமெரிக்கனும்  ரஷ்யனும்    
உன்  பக்கம்  வந்து போனதால்
என்னவோ - உன்
தமிழில்  எத்தனை
கலப்படங்கள் ?
ஏன்  இத்தனை  படுகொலைகள்
உன்  நாவினில்  புரிகின்றாய் 
நிலவே  நீயும் "தமிழை "
"தமில்" என்கிறாய்
"பழத்தை" "பலம் "  என்கிறாய்
இது  உன்  பலமில்லை
பலவீ னமே !
அகத்தியர் முதல் ஓளவை  வரை 
வளர்த்த "தமிழ்" உன் வார்த்தைகளில்
அகப்பட்டு  வலது  குறைந்த  தமிழாய்
வாழ்கிறது
வாழும்  தமிழை  வளர்ப்போம் 
வா  எந்தன்  நிலவே "பலம் " பெறுவோம்
"பழம்" சுவைப்போம்..... 
           
                                                

தூரப்பார்வை

நீ என் அருகில்
இருந்தபோது -நான்
அடிக்கடி
பார்க்கும் தூரப்பார்வையின்
அர்த்தம் கேட்டு நச்சரிப்பாயே?
நான் பார்க்கும்
பார்வையின்
அர்த்தம்-உன்
அப்பன் வருகிறானா?
என்றடி........................

Monday, December 6, 2010

கொல்லும் நினைவுகள்

என் வயது
இருபதுகள் மூன்றானாலும்
உன் நினைவுகள்
என்றும் முதுமையை
கொல்லும் பதினாறு

விலகமுடியா உறவு

என் படுக்கையில் பக்கத்தில் படுத்துறங்கும்  -நீ
தூக்கத்தை களைக்கிறாய்
காதுகளுக்குள் முனுமுனுக்கிறாய்
காலையில் எனை
கண்னெழுப்பினாலும்
தேனீர் தர மறுக்கிறாய்
என் பயணப்பொழுதுகளிலும்
நெருங்கும் நேரங்களிலும-என்
உதிரத்தை உறிஞ்சுகிறாய்
உன் உறவை விட்டு விலகமுடியுமா?

விறகாய் எறியும் இதயம்

உன்னை நினைத்து நினைத்து என்
மனம் மரமாய் போனதடி
மழையிலும் கூட நகர மறுத்து
நனையுதடி
வெயில் சுடும் வேதனையில்
கண்ணீராவி போகுதடி
காலம் கடந்து
நகர்ந்தாலும் -என் மனம்
உன் வீட்டில்
விறகாகி எரியுமடி......................