Saturday, November 11, 2017

பாகிஸ்தான் மண்ணில் மேற்கிந்திய தீவுகள்...

அடுத்த வருடம் மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் கிரிகெட் அணி பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு பயணிக்க காத்திருக்கின்றது.
மூன்று போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ளதாக  அந்நாட்டு கிரிகெட் சபை அறிவித்துள்ளது. இம்மாதம் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் தர்க்க ரீதியான சவால்கள் காரணமாக தொடர் அடுத்த வருடம் மார்ச் மாததிற்கு பிற்போடப்பட்டுள்ளது.



மூன்று டி20 போட்டிகளும் மார்ச் 29 31 மற்றும் ஏப்பிரல் 1 திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிகெட் சபையின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.


 இந்நிலையில் இரு அணிகளும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, September 10, 2017

டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத ஓய்வை கோரியுள்ளார் சக்கீப் அல் ஹஷன்....

சக்கீப் அல் ஹஷன் தனக்கு டெஸ்ட் கிரிகட் போட்டிகளில் ஆறு மாதங்களுக்கு ஓய்வு தேவைப்படுதாக கோரி பங்களாதேஷ் கிரிகட் கட்டுப்பாட்டு சபையிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளார். இந்நிலையில் அதுதொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணிவிபரம் அறிவிக்க ஒரு மணித்தியாளத்துக்கு முன்னர் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


சக்கீப்பின் விடயம் குறித்து பங்களாதேஷ் கிரிகட் கட்டுப்பாட்டு சபை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதத்தின் பின்னர் இலங்கை அணிக்கெதிரான தொடரில் அவர் விளையாட வாய்புள்ளதாகவும்  சக்கீப் நீண்ட காலம் சர்வதேச கிரிகட் போட்டிகளில் நீடிக்க விரும்புகிறார் போல தெரிகின்றது ...
" சக்கீப் அல் ஹஷன் ஆறு மாதங்களுக்கு ஓய்வு கோரியுள்ளார் என்பதை பங்களாதேஷ் கிரிகட்டின் ஊடக குழுவின் தலைவர் ஜலால் யூசுப் உறுதிபாடுத்தியுள்ளார்."

இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பங்களாதேஷ் அணிக்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் காணப்படுகின்றன. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் விளையாடவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள்  2 T டுவென்டி போட்டிகளிலும்  இலங்கை அணியுடனான 3  ஒருநாள் போட்டிகள்  
T வென்டி போட்டிகளில் அவர் விளையாடுவார் எனக்கூறப்பட்டுள்ளது..
கடந்த பத்து ஆண்டுகளாக பங்களாதேஷ் கிரிகட்டின் மிக முக்கிய வீராக  மூன்று வகை போட்டிகளிலும் சக்கீப் அல் ஹஷன்  காணப்படுவதோடு , 2011 ஆண்டின் பின்னர்  T டுவென்டி போட்டிகளில் முக்கிய இடத்தை அனைத்து முக்கிய  T டுவென்டி தொடர்களிலும்  தக்கவைத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது  மூன்று விதமான போட்டிகளிலும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் சக்கீப் அல் ஹஷன்  முதலிடத்திலுள்ளார்.