Tuesday, December 27, 2011

சச்சினின் 100 வது சதம்..









ச்சின் மீண்டும் தனது 100வது சதம் பெறும் வாய்ப்பை  தவறவிட்டார். 1989 நவம்பர் மாதம் 15 திகதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் , 17 வது நிறம்பிய இளம் சச்சின் கிரிக்கட் உலகிற்கு வெளிப்பட்டார். அன்று தொடக்கம் இன்று வரை துடிப்புடன் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் கிரிக்கட் உலகின் ஜம்பவானின் 100வது சதத்தை உலக வாழ் கிரிக்கட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். எதிர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சச்சினின் துடுப்பாட்டம் சிம்மசொப்பனமே.
                                                   
அவர் ஒருநாள் போடடிகளில் 48 சதங்களையும் 95 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு , டெஸ்ட் போட்டிகளில் 51   சதங்கள் 63 அரைச்சதங்களை பெற்று தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவருகின்றார்.
                                                           
அவுஸ்திரேலியாவின் மெல்பேனில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டி சச்சினின் களமாக அமையுமா? இரண்டாம் இன்னிங்ஸிலாவது சதம் பெற்றும் சந்தர்பம் ஏற்படவேண்டும். தனது ரசிகர்களுக்கு சச்சின் இன்ப அதிர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்…………. 



Friday, December 23, 2011

இந்திய வீரரகளின் அவுஸ்திரேலிய கனவு

அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் மெல்போனில் (Melbourne) ஆரம்பமாகவுள்;ளது. தொடர் வெற்றியியை பெறுவதே இந்திய அணி வீரர்களின் எதிர்பார்பாக அமைந்துள்ளது. “அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது எங்களின் கனவு” என இந்திய அணியின் வீரர் லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
                                                   
1996 ம் ஆண்டு அஹமதாபாத் (Ahmedabad) தென்னாபிரிக்க அணிக்கெதிரா டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட லக்ஷ்மன் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அவுஸ்திரேலிய மண்ணில் 4 சதங்கள் 3 அரைசதங்கள் அடங்களாக 1081 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதிகபடியான 178 ஓட்டங்களும் அதில் உள்ளடக்கம். அவரின் கணிப்பின் படி அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றதென சுட்டிக்காட்டியுள்ளார்.
                                                         
தமது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்றுக் கொண்ட 5-0 என்ற அடிப்படையிலான வெற்றியை போன்றதொரு வெற்றியை  அவுஸ்திரேலிய மண்ணில் எதிர்பார்பதாக லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியில் கனவு அவுஸ்திரேலியாவில் பலிக்க போகிறதா? வழமை போல வாங்கிகட்ட போகிறதா  ?  இந்தியா பொறுத்திருப்போம்..............

Tuesday, December 20, 2011

இந்திய அணி குறித்து இயன் செப்பல் ஆரூடம்...


அவுஸ்திரேய மண்ணில் இதுவரை டெஸ் தொடரை வெற்றிபெறாத இந்திய அணி இம்முறை டெஸ் தொடரை முதல் முறையாக வெற்றிகொள்ளுமென அவுஸ்திரேய அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
                                                   
                                                 
1964ம் ஆண்டு முதல் 1980 ம் ஆண்டு வரை பதினாறு வருடம்  டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் கொண்ட செப்பல்  14 சதங்கள்  26 அரைச்சதங்களை பெற்றுள்ளார். அவரது எதிர்வுகூறலை மகேந்திரசிங் தோணி தலைமையிலான இந்திய அணி உறுதிசெய்யுமா என்ற கேள்விக்குறி எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ளது. 

                               
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் விரேந்திர ஷேவாக்கின் அதிரடியான துடுப்பாட்டமும் ஷயிர் கானின் வேகபந்து வீச்சும் வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்துமென செப்பல் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியில் மாஷ் ,வொட்சன் , மிச்செல் ஜோன்ஸன் ஆகிய முத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளமை இந்திய அணிக்கு வாய்ப்பாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ச்சியாக போதிய போர்ம் (form) இல்லாமல் தவித்துவரும் ரிக்கிபொன்டிங் மீண்டும் தனது பழைய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவாரெனவும் இயன் செப்பல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
                              
இது எந்தளவு உண்மையாகபோகிறது , எதிர்வரும்  26 போட்டி ஆரம்பமாகி முடியும்வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்…..