அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் மெல்போனில் (Melbourne) ஆரம்பமாகவுள்;ளது. தொடர் வெற்றியியை பெறுவதே இந்திய அணி வீரர்களின் எதிர்பார்பாக அமைந்துள்ளது. “அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது எங்களின் கனவு” என இந்திய அணியின் வீரர் லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
1996 ம் ஆண்டு அஹமதாபாத் (Ahmedabad) தென்னாபிரிக்க அணிக்கெதிரா டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட லக்ஷ்மன் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அவுஸ்திரேலிய மண்ணில் 4 சதங்கள் 3 அரைசதங்கள் அடங்களாக 1081 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதிகபடியான 178 ஓட்டங்களும் அதில் உள்ளடக்கம். அவரின் கணிப்பின் படி அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றதென சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்றுக் கொண்ட 5-0 என்ற அடிப்படையிலான வெற்றியை போன்றதொரு வெற்றியை அவுஸ்திரேலிய மண்ணில் எதிர்பார்பதாக லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியில் கனவு அவுஸ்திரேலியாவில் பலிக்க போகிறதா? வழமை போல வாங்கிகட்ட போகிறதா ? இந்தியா பொறுத்திருப்போம்..............


No comments:
Post a Comment