அடுத்த வருடம் மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் கிரிகெட் அணி பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு பயணிக்க காத்திருக்கின்றது.
மூன்று போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிகெட் சபை அறிவித்துள்ளது. இம்மாதம் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் தர்க்க ரீதியான சவால்கள் காரணமாக தொடர் அடுத்த வருடம் மார்ச் மாததிற்கு பிற்போடப்பட்டுள்ளது.
மூன்று டி20 போட்டிகளும் மார்ச் 29 31 மற்றும் ஏப்பிரல் 1 திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிகெட் சபையின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு அணிகளும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment